search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலை மின் உற்பத்தி உயர்வு"

    தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதன்படி காற்றாலைகள் மூலம் மட்டும் 3660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ஏராள மான காற்றாலைகள் உள்ளன. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதன்படி ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜூன் மாதம் ஆரம்பம் முதலே காற்றாலைகள் இயங்கத் தொடங்கின.

    ஒரு காற்றாலையில் 500 முதல் 1000 யூனிட் அளவுக்கு மின் உற்பத்தி இருக்கும். இது காற்றின் வேகம் அதிகரிக்கும் போது இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு சராசரியாக 4 ஆயிரம் யூனிட் அளவுக்கு மின் உற்பத்தி நடந்து வருகிறது. தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மட்டும் இன்றி கோவை மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காற்றாலைகள் மூலம் மட்டும் 3660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே நடந்து வருகிறது. ஆந்திராவில் தற்போது 2814 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் 2222 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் காற்றாலைகள் மூலம் 34 மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் அதிகபட்ச மின் உற்பத்தி காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.
    ×